சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 162 சந்தேக நபர்கள் கைது..!

suspects arrested in CNB operation drugs
(Photo: Central Narcotics Bureau)

சிங்கப்பூரில் இரண்டு வார காலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 162 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 14 வயது சிறுமியும் அடங்குவார் என்று CNB வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

அதில் கைது செய்யப்பட்ட இளைய நபர், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் புழங்கி என்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, கடந்த செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 25 வரையிலான இந்த சோதனை நடவடிக்கையின் போது S$260,500 மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

ஜுராங் வெஸ்ட், புக்கிட் பஞ்சாங், பாயா லெபார் (Paya Lebar), பாலேஸ்டியர் (Balestier) மற்றும் தெம்பனீஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் CNB குறிப்பிட்டுள்ளது.

மேலும், பீச் ரோட்டில் நடந்த சோதனையில், 34 முதல் 56 வயதுக்கு உட்பட்ட 5 பேர் ஹோட்டல் அறைகளில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக இலக்குடன் கூடிய தனிமைப்படுத்தப்படும் அணுகுமுறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…