சென்ட்ரல் மாலில் அமைந்துள்ள மூன்று உணவகங்களுக்கு தற்காலிக தடை

3 eateries in Clarke Quay's Central Mall suspended for 2 weeks
PHOTO: Google Maps

கிளார்க் குவேயில் உள்ள சென்ட்ரல் மாலில் அமைந்துள்ள மூன்று உணவகங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதன் நடவடிக்கைகள் இரண்டு வாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் ராட்சத உடும்பு நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம் – பாதுகாப்புடன் இருக்க என்ன செய்வது?

அதாவது, சென்ட்ரல் மால் காபிஹவுஸ் மற்றும் Oyster Co the Food Shop ஆகியவற்றின் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தடை கடந்த மே 25 முதல் ஜூன் 7 வரை நீடிக்கும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த மூன்று கடைகளும் என்ன குற்றங்களைச் செய்தது என்பதை SFA விவரிக்கவில்லை.

மேலும், அந்த 3 கடைகளுக்கும் தலா ஆறு குற்றப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் SFA கூறியுள்ளது.

வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்