மீண்டும் ராட்சத உடும்பு நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம் – பாதுகாப்புடன் இருக்க என்ன செய்வது?

punggol-monitor-lizard
Simon Owen Khoo from Singapore Wildlife Sightings/Facebook

சிங்கப்பூரில் ராட்சத உடும்புகளின் நடமாட்டம் என்ற தலைப்பு கொண்ட செய்திகள் சமீப நாட்களில் அதிகமாக இடம்பெறுகிறது.

நேற்று முன்தினம் பெடோக் நார்த் ரோடு, பிளாக் 428 இல் வீட்டு வாசலுக்கு வந்த ராட்சத உடும்பு அங்கு வசிக்கும் மக்களை அலற செய்தது.

துவாஸில் 33 வயதான ஊழியர் மீது கனரக வாகனம் மோதி விபத்து

அதே நாளில், பொங்கோல் பகுதியில் மற்றொரு ராட்சத உடும்பு தரையில் இருந்து மூன்று மாடி ஏறி, ஜன்னல் விளிம்புகளில் ஹாயாக உலாவுவதை கண்டதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை சைமன் ஓவன் கூ என்பவர் Singapore Wildlife Sightings ஃபேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார்.

வீட்டுல யாருப்பா இருக்கீங்க.. அழையா விருந்தாளியாக வந்த “ராட்சத உடும்பு” – சிதறி ஓடிய மக்கள்

சமீப நாட்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உடும்புகளில் நடமாட்டம் அதிகம் இடம்பெறுவதால், பொதுமக்கள் அதனை சீண்ட வேண்டாம் என தேசிய பூங்கா கழகம் கூறியுள்ளது.

ஏனெனில், தன்னை பாதுகாக்க அது உங்களை தாக்க நேரிடும் என்றும் அது கூறியுள்ளது. எனவே, அதன் நடமாட்டத்தை கண்டால் தேசிய பூங்கா கழகத்துக்கு தகவல் கொடுங்கள்.

உடும்பு கடித்து விட்டால் உடனே மருத்துவரை நாடும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்