‘அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சிக்கிய போதைப்பொருட்கள்’- நான்கு பேர் கைது!

Photo: Central Narcotics Bureau

சிங்கப்பூரில் வார இறுதியில் செங்காங் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

“போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் கையிருப்பில் உள்ளது”- பேரங்காடிகள் விளக்கம்!

இது குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுத் துறை இன்று (27/09/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (Central Narcotics Bureau- ‘CNB’) அதிகாரிகள் நடத்திய சோதனையில் போதைப்பொருளைக் கடத்தியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 4,00,000- க்கும் அதிகமான சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 45 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மற்றொருவரான பெண்ணுக்கு 37 வயது ஆகிறது.

மலேசியாவின் ‘DuitNow’ செயலியுடன் இணையவுள்ள சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி!

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் சுமார் 4.5 கிலோகிராம் போதை அபின் 4,342 கிராம் ஹெராயின், 191 கிராம் ஐஸ், 15 கிராம் கஞ்சா, 207 கிராம் எக்ஸ்டஸி மாத்திரைகள், 142 எரிமின் -5 மாத்திரைகள் மற்றும் 10 லைசெர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (Lysergic Acid Diethylamide- ‘LSD’) முத்திரைகள் ஆகியவை அடங்கும். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.