தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதி இல்லாமல் மதுபானம், சிகரெட் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை..!

Certis investigating after auxiliary police officers poured alcohol down drain at Tuas View Dormitory
Screengrabs from video posted on Singapore Road Accident/ FB

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில், அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட மதுவை அப்புறப்படுத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக Certis தெரிவித்துள்ளது.

சீருடை அணிந்த துணை காவல் அதிகாரிகள், பாட்டில் மற்றும் கேன்களில் உள்ள மதுபானங்களை ஒரு வடிகாலில் ஊற்றும் காணொளி பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை அசுத்தமாக வைத்திருந்த விடுதி நடத்துனருக்கு அபராதம்..!

இந்த காணொளி, கடந்த வியாழக்கிழமை (செப்., 17) Singapore Road Accident பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் மூன்று Certis CISCO துணை காவல் அதிகாரிகள் ஆல்கஹால் பாட்டில்கள் மற்றும் கேன்களில் இருந்து பாதுபானத்தை வடிகாலில் ஊற்றுவதைக் காணலாம்.

CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த Certis: துவாஸ் வியூ தங்கும் விடுதியில், அதன் துணை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட மதுவை அகற்றுவதற்கு உதவியதாக தெரிவித்துள்ளது.

Alcohol being pour into drain

Worker tried to sumggle alcohol into dormitory and got caught.

Posted by Singapore Road Accident on Wednesday, September 16, 2020

இந்த சம்பவத்தை தீவிரமாக கருதுவதாகவும், மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மதுபானம், சிகரெட் போன்றவற்றை உரிய அனுமதி இல்லாமல், மறைமுகமாகக் கொண்டு செல்லும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 5,700 ஊழியர்கள் வேலைக்கு மீண்டும் திரும்ப தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…