கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை: 18 பேருந்து சேவைகளின் அட்டவணையில் மாற்றம்!

Photo: SBS Transit

சிங்கப்பூரில் பொதுபோக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக விளங்குவது எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit). இந்த நிறுவனம் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு

இந்த நிலையில், எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் இன்று (15/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையொட்டி, டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆகிய இரு நாட்களிலும் அலுவலகங்கள் வழக்கமான நேரங்களை விட முன்னதாகவே மூடப்படும் என்பதால், மதியம் வீட்டிற்குச் செல்லும் பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் பேருந்து சேவைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எஸ்பிஎஸ் நிறுவனத்தின் 10e, 14e, 30e, 74e, 89e, 151e, 174e, 196e, 513, 652, 654, 655, 660, 667, 668, 671, 672 மற்றும் 850E ஆகிய 18 பேருந்து சேவைகளின் பயண நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 24, டிசம்பர் 31 ஆகிய இரு நாட்களிலும் காலை பல்வேறு ஹார்ட்லேண்ட் பகுதிகளில் இருந்து நகரம்/ வணிக மாவட்டத்திற்கு (Various Heartlands to the City/Business District) வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், மதிய வேளையில் திரும்பும் பயண பேருந்துகள் (Return Trips) 12.51 PM மணி முதல் 02.00 PM மணி வரை இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பயணிகள் www.sbstransit.com.sg என்ற எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் (அல்லது) 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.