வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!

Photo: Singapore Customs

சிங்கப்பூரில் சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூர் சுங்கத்துறை (Singapore Customs), குடிநுழைவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (Immigration & Checkpoints Authority), சிங்கப்பூர்- மலேசியா எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அவ்வப்போது சிங்கப்பூர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு

அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 8- ஆம் தேதி அன்று காம்பாஸ் கிரசென்ட் (Gambas Crescent) அருகே ஒரு நபர் சரக்குகளை கிடங்கில் இருந்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததைக் கவனித்த சுங்கத்துறை அதிகாரிகள், அங்கு சென்று சிங்கப்பூர் பதிவெண் கொண்ட லாரியில் (Singapore Registered Truck) இருந்த ஆறு குளிரூட்டும் அலகுகளிலும் (Air Conditioning Units) வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் மறைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

1,500- க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த வரி (Total Duty) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services tax- ‘GST’) ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முறையே 1,29,280 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10,370 சிங்கப்பூர் டாலர் ஆகும். இந்த கடத்தல் தொடர்பாக, 39 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சீனா நாட்டைச் சேர்ந்தவர் ஆவர். மேலும், அந்த நபருக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சிங்கப்பூர் சுங்கத்துறை (Singapore Customs) இன்று (15/12/2021) வெளியிட்டிருந்த தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.