சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

Photo: Wikipedia

சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று விகிதம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் ஆகியவையை அடிப்படையாகக் கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், நேற்று (14/12/2021) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் குழு (Multi-Ministry Taskforce- ‘MTF’) பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மது அருந்தினால் என்ன தண்டனை? மறந்தும் செய்யக்கூடாதவை!

அதன்படி, சிங்கப்பூர், மலேசியா இடையேயான கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை (தரைவழி) (Land VTL) விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு குடிமக்கள், நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் இரு நாடுகளிடையே பயணத்தை மேற்கோள்ளலாம். இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 20- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், கொரோனா பரிசோதனை தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை. சிங்கப்பூர் வரும் மலேசிய பயணிகள் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ‘ART’ கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளை சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டில் இருந்து பணிப்புரிபவர்களில் 50% பேர் வரை அலுவலகத்திற்கு சென்று பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், முழுமையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிக்கு கிருமித்தொற்று உறுதி – சென்னைக்கு மாதிரி அனுப்பி வைப்பு

18 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் வரும் டிசம்பர் 14- ஆம் தேதி முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதியில் இருந்து அனைத்து உட்புற விளையாட்டு வசதிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 442 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் தளர்வுகளைப் பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள், பணியிடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல்; சோப்பைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.