சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

சாங்கி ஏர்போர்ட் முனையம் 2
Changi Airport Group

சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டின் (T2) வடக்குப் பகுதியில் செயல்பாடுகள் இன்று தொடங்கிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3½ ஆண்டுகள் பொறியியல் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு அதன் செயல்பாடுகள் தொடக்கம் காண்கிறது.

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்

15,500 சதுர மீட்டர் கூடுதல் இடத்தைக் கொண்டு அந்த இடம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, வரும் வாரங்களில் அங்கு கடைகள் மற்றும் உணவகங்கள் படிப்படியாக திறக்கப்படும்.

வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முனையம் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

T2 இன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வசதிகளை தற்போது பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்கள் T2 இன் வடக்குப் பிரிவில் இருந்து செயல்படத் தொடங்கும்.

மேலும், ஜெர்மன் நாட்டின் லுஃப்தான்சா மற்றும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஆகியவையும் T2 இன் வடக்குப் பிரிவில் இருந்து செயல்படத் தொடங்கும்.

இதனை சாங்கி விமான நிலைய குழுமம் (CAG) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூரர்கள் தான் உலகின் மோசமான ஓட்டுனர்கள்” என கருத்து வெளியிட்ட பெண் – தெறிக்கும் கமெண்ட் பிரிவு