COVID-19: சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2-இன் செயல்பாடுகள் 18 மாதங்களுக்கு நிறுத்தம்..!

Parliament: Changi Airport T2 operations to be suspended for 18 months amid coronavirus outbreak
Parliament: Changi Airport T2 operations to be suspended for 18 months amid coronavirus outbreak

சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனையம் 2இன் செயல்பாடுகள், வரும் மே 1 முதல் 18 மாதங்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் (ஏப்ரல் 6) தெரிவித்துள்ளார்.

இதம் மூலம் விமான நிலைய ஆபரேட்டர், சில்லறை குத்தகைதாரர்கள், விமான நிறுவனங்கள் போன்றவற்றின் இயங்கு செலவுகளை சேமிக்கலாம் என்று திரு காவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் PCF Sparkletots பாலர் பள்ளி ஆசியருக்கு COVID-19 தொற்று; பள்ளி 10 நாட்களுக்கு மூடல்..!

மேலும் கூறுகையில், “விமான நிலையத்தில், தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்தை கையாள ஒரு முனையம் போதுமானது” என்றார்.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானப் பயணங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது, குறிப்பாக சாங்கி விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, முனையம் 2இல் மேம்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த இந்த காலம் உதவுதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட கால அளவு ஒரு வருடம் வரை குறைவதாகவும், திரு காவ் குறிப்பிட்டுள்ளார்.

T2 செயல்பாடுகள் நிறுத்தப்பட்டவுடன், மீதமுள்ள முனையங்களில் விமான நிறுவனங்கள் சேவைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) டெர்மினல் 3இல் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டு தங்கும் விடுதிகளில் சுமார் 19,800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!