சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ரோபோக்கள்!

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ரோபோக்கள்!
Photo: Singapore Police Force

 

தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று சாங்கி சர்வதேச விமான நிலையம் (Changi International Airport). இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கு சாங்கி சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், 100- க்கும் அதிகமான விமானங்கள் என எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் சாங்கி விமான நிலையம், அனைத்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் மிகச்சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது இந்த விமான நிலையம்.

பயணிகளுக்கான பாதுகாப்பில் அதிக முன்னுரிமை, சிறந்த சேவை ஆகியவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாங்கி விமான நிலையம், ரோந்து பணிகளில் ரோபோக்களைப் பணியமர்த்தியுள்ளது. சிங்கப்பூர் காவல்துறை சார்பில் இந்த ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

அந்த வகையில், சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் (Terminal 4) சிங்கப்பூர் காவல்துறைக்கு உதவும் வகையில் ரோந்து ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகின்றனர். 360 டிகிரியில் சுழலும் கேமரா, நகர்வதற்கு உதவும் வகையில் சக்கரங்கள், உடனுக்குடன் தகவல்களை காவல்துறை அனுப்புவது உள்ளிட்டவை இந்த ரோபோவின் சிறப்பம்சங்கள்.

முதற்கட்ட விமான நிலையத்தின் முனையம் 4- ல் இரண்டு ரோபோக்கள் (Singapore Police Force Patrol Robots) பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த ரோபோக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, ஜுவல் விமான நிலையத்தில் தூய்மைப் பணிக்காக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.