ஜன.01 முதல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஜிஎஸ்டி வரி உயர்வு அமல்!

ஜன.01 முதல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஜிஎஸ்டி வரி உயர்வு அமல்!
Photo: Changi Airport

 

சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் (Changi International Airport) நான்கு டெர்மினல்களில் (Terminals) பொதுப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் (Retail Shops) 2024- ஆம் ஆண்டு ஜனவரி 01- ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி (Goods and Services Tax- ‘GST’) உயர்வு அமலுக்கு வருகிறது. அதாவது, 8%- லிருந்து 9% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வரவுள்ளது. இந்த தகவலை சாங்கி விமான நிலைய நிர்வாகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

எனினும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அதிரடி சலுகைகளையும் சாங்கி விமான நிலையம் அறிவித்துள்ளது. அதில், ‘2xGST Promotion’ நாட்களான ஜனவரி 12- ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி வரையும், ஜனவரி 19- ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரையும், ஜனவரி 26- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரையும் என மொத்தம் 9 நாட்களுக்கு சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் குறைந்தபட்சம் 30 வெள்ளிக்கு மதிப்புள்ள பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 9% தள்ளுபடி வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 60 வெள்ளிக்கு மதிப்புள்ள பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சாங்கியின் டிஜிட்டல் வாலட் (Changi’s Digital Wallet) சாங்கி பே வழியாக மாஸ்டர்கார்டைப் பயன்படுத்தித் தொகையைச் செலுத்தினால் 9 வெள்ளி சாங்கி பே ரிட்டர்ன் வவுச்சரை (Changi Pay Return Voucher) பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங் மோ கியோவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் – சிதைந்து துர்நாற்றம் வீசிய பரிதாபம்

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.