விரைவு பரிசோதனை நிலையங்களில் இன்று முதல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பு பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு… இவர்கள் வெளியே வர வேண்டாம் என கடும் ஊக்குவிப்பு

பொதுமக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருந்தாலும், தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும்; குறிப்பாக, முதியவர்கள் அடுத்த நான்கு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் வசதி, வெண்டிலேட்டர் வசதி, மருந்துகள் உள்ளிட்டவைத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் புதிதாக 3 தொற்றுக் குழுமங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அடையாளம்

இந்த நிலையில், இன்று (01/10/2021) முதல் விரைவுப் பரிசோதனை நிலையங்களில் (Quick Test Centres-‘QTCs’) கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், “தீவு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள விரைவுப் பரிசோதனை நிலையங்கள் மூலம் சிங்கப்பூர்வாசிகள் பரிசோதனைக்கு பதிவு செய்துக் கொள்ளலாம். வழக்கமான சுய பரிசோதனையோடு கூடுதலாக, விரைவுப் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக அது உதவும். பரிசோதனை கட்டணமாக 15 சிங்கப்பூர் டாலர் ஆகும். இந்த கட்டணத்தை ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையில் மட்டுமே மேற்கொள்ள முடியும். கொரோனா ஸ்வாப் ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை (COVID-19 Self-Swab Antigen Rapid Test- ‘ART’) மேற்கொள்ளப்படும்.

இதற்காக, சிங்கப்பூர் முழுவதும் 25 விரைவுப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘Hougang Town Centre’, ‘Jurong West Sports Hall’, லிட்டில் இந்தியா பேருந்து முனையம் உள்ளிட்ட இடங்களில் விரைவுப் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. விரைவுப் பரிசோதனை நிலையங்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு செல்வோர், மேற்பார்வையாளர் முன்னிலையில் சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம். பரிசோதனை முடிவை 24 மணி நேரத்துக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பாலாஜி, ஆதில் என்ற இரண்டு அரிய இளம் ஒட்டகச்சிவிங்கிகள்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் உணவகத்தில் சாப்பிடவும், நிகழ்ச்சிகளுக்கு முந்திய பரிசோதனைகளுக்கும், பரிசோதனை முடிவின் சான்றைப் பயன்படுத்தலாம். இது தொடர்பாக, மேலும் விவரங்களுக்கு https://www.moh.gov.sg/covid-19/quick-test-centres-(qtcs) என்ற இணைய தளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.