சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு… இவர்கள் வெளியே வர வேண்டாம் என கடும் ஊக்குவிப்பு

Pic: AFP

சிங்கப்பூரில் அண்மையில் கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் அறிவோம்.

இந்நிலையில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து முதியவர்களும், குறிப்பாக தடுப்பூசி போடாதவர்கள், அடுத்த நான்கு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) படி, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுடன் ஒன்றாக வாழும் மக்களுக்கும் இது பொருந்தும்.

சிங்கப்பூரில் புதிதாக 3 தொற்றுக் குழுமங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அடையாளம்

ICA வெளியிட்ட தககுவலின் படி, மூத்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில், அவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கடுமையான உடல்நல சிக்கல்களை அது உருவாக்கும் அபாயம் அதிகம்.

கடந்த இரண்டு வாரங்களில் உள்ளூரில் பதிவான கோவிட் -19 பாதிப்புகளில் கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.

அடுத்த நான்கு வாரங்களில், குழு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சமூக ஒன்றுகூடலை குறைக்க முதியவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், ஹாக்கர் உணவு நிலையங்களில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற செயல்களைக் குறைக்கவும், அதற்குப் பதிலாக சாப்பாடு வாங்கி செல்லும் முறையை தேர்வு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பாலாஜி, ஆதில் என்ற இரண்டு அரிய இளம் ஒட்டகச்சிவிங்கிகள்!