‘சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கடக்கும் வசதி’- ICA- வின் முக்கிய அறிவிப்பு!

'சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கடக்கும் வசதி'- ICA- வின் முக்கிய அறிவிப்பு!
Photo: ICA

 

சிங்கப்பூரில் இருந்து காரில் மலேசியா செல்லும் பயணிகளின் குடிநுழைவு சோதனையை எளிமையாக்கும் வகையில், புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் (Immigration & Checkpoints Authority- ‘ICA’).

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

இது குறித்து சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு காரில் வரும் பயணிகள், சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகள் இனி கடவுச்சீட்டுக்கு (Passports) பதிலாக QR குறியீட்டைப் பயன்படுத்தி எளிமையாக சோதனைச் சாவடிகளை கடக்க முடியும்.

தனிநபர் அல்லது ஒரே வாகனங்கள் பயணம் செய்யும் 10 பேர் கொண்ட குழுவினர் QR குறியீட்டைப் பயன்படுத்தி, ஆவணங்களின் சரிபார்ப்பை எளிதில் முடித்துவிட்டு புறப்படலாம். இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 19- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மெரினா பே சாண்ட்ஸில் இருந்து கீழே விழுந்த ஆடவர்.. சம்பவ இடத்திலேயே மரணம்

பயணிகள் ‘MyICA’ மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ‘Singpass’ வழியாக சுய விவரங்களை குறிப்பிட்டு பதிவுச் செய்துக் கொண்ட பிறகு, சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம். முதல் முறையாக சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் சோதனைச் சாவடியில் கடவுச்சீட்டைக் காட்ட வேண்டும். இந்த புதிய அம்சங்கள் பயணிகளுக்கு மிகவும் உதவும்” எனத் தெரிவித்துள்ளது.