“வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் பங்களிப்பு, தியாகங்களை ஒப்புக்கொள்வது கூட கிடையாது” – சீ சூன்

Chee Soon Juan/Facebook

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சீ சூன் ஜுவான், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியவர்கள் போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

அவரது கடையான, Orange & Teal உணவகத்தை கட்ட உதவிய வெளிநாட்டு ஊழியர்களை மதிய உணவிற்கு அவர் அழைத்து, செப். 5 அன்று அந்த உணவகத்தில் விருந்தளித்தார்.

கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் கடுமையாக உழைத்த போதிலும், அவர்கள் உருவாக்கியதை அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது பற்றி சீ நேற்று (செப். 7) ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் சாலைகளை அமைத்த ஊழியர்களால், அதில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை, அவர்கள் எங்கள் குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள், ஆனால் அவற்றில் ஒருபோதும் வசிக்க மாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.

அவர்கள் சிங்கப்பூர் பூங்காக்களை அழகுபடுத்துகிறார்கள், ஆனால் அவர்களை அவற்றில் உலாவ மாட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதனை காரணமாக, Orange & Teal உணவகத்தை கட்ட உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு அங்கு மதிய உணவு அளிக்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.

பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ளவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு செய்யும் பங்களிப்புகளையும் அவர்கள் செய்த தியாகங்களையும் ஒப்புக்கொள்வதோ அல்லது பார்ப்பதோ கூட கிடையாது என்று சீ கூறினார்.

சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!