கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

Google Maps

கோவிட்-19 தொற்று காரணமாக 93 வயதான மூதாட்டி நேற்று (செப். 8) உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த செப். 2ல் அந்த மூதாட்டிக்கு நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவையுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள இலவச மளிகை, உணவு பொருட்கள்…

அதன் பின்னர் அவர் செப்டம்பர் 5ஆம் தேதி, தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா ஆகிய நாள்பட்ட பிரச்சனைகள் இருந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.

அந்தப் மூதாட்டி கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கோவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!