லோயாங் டிரைவில் ஏற்பட்ட அபாயகரமான இரசாயனக் கசிவு

scdf-hazmat
SCDF

சிங்கப்பூரில், 51 லோயாங் டிரைவில் நேற்று (பிப். 1) மாலை சுமார் 5:05 மணியளவில் ஏற்பட்ட அபாயகரமான இரசாயனக் கசிவு சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

வளாகத்திற்குள் அமைந்துள்ள நான்கு முதல் இரண்டு மீட்டர் அளவுள்ள இரசாயனக் கழிவுக் கொள்கலனில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியதாக SCDF பேஸ்புக் பதிவில் விளக்கியது.

இது மட்டும் இல்லையென்றால் என்ன ஆயிருக்கும்? சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது போடப்பட்ட 999 வருட ஒப்பந்தம்!

அதே போல, அந்த கழிவுக் கொள்கலனில் ஏதேனும் அபாயகரமான பொருள் (HazMat) உள்ளதா என்பதை உறுதிப்படுத்த டிடெக்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் இது பற்றி கூறிய SCDF, கொள்கலனில் சேமிக்கப்பட்ட பாட்டில்கள் மற்றும் டிரம்களில் இருந்து தான் இரசாயன கசிவு ஏற்பட்டது என விளக்கியது.

யாருக்கும் எந்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் SCDF தெரிவித்துள்ளது.

SCDF வீரர்கள் வருகைக்கு முன்னர் சுமார் ஏழு நபர்கள் சுயமாக அங்கிருந்து வெளியேறினர்.

சிங்கப்பூருக்கு வருங்காலமே இல்லையென்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசிய சம்பவம் – இன்னைக்கும் “கெத்து” குறையாமல் நிற்கும் பின்னணி..!