சென்னை விமான நிலையத்தில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் கைது!

Photo: Chennai customs Official Twitter Page

எத்தியோப்பியா தலைநகர் அட்டஸ் அபாபேவில் (Addis Ababa) இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி அன்று உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த உகாண்டா பெண்ணின் உடைமைகளை மோப்பநாயின் உதவியுடன் சோதனை செய்தனர்.

உங்களுடைய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கலாம்!

அப்போது, அவர் கொண்டு வந்திருந்த அட்டைப்பெட்டியில் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. பின்னர், அட்டைப்பெட்டியை உடைத்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 644 கிராம் எடையுள்ள ஹெராயின், 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,542 கிராம் போதைப்பொருள் ஆகியவையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக, உகாண்டா பெண்ணை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு!

போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பான வீடியோவை சென்னை சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.