சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு!

Photo: CDC Vouchers Scheme

சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 3- ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 372 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 2023- ஆம் ஆண்டுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (Community Development Council Vouchers- ‘CDC Vouchers Scheme’) வழங்கும் திட்டத்தை சிங்கப்பூரின் நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் தொடங்கி வைக்கவுள்ளார்.

சிங்கப்பூரில் விறுவிறு விற்பனையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் உடைகள்!

இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கும் தலா 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இதில் 150 வெள்ளியை குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மீதம் உள்ள 150 வெள்ளியை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் உணவங்காடிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூனையின் நினைவிடத்தில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்திய சிங்கப்பூரர்கள்! – அகால மரணமடைந்த பூனை!

இந்த பற்றுச்சீட்டுகள் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவும். ஜனவரி 3- ஆம் தேதி முதல் உங்களின் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த தொடங்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.