‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX 687 என்ற விமானத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வியாழன்கிழமைகளில் மட்டும் விமான சேவையை வழங்கி வருகிறது விமான நிறுவனம்.

சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் வரை இந்த நாட்டுக்கு ஜாலியா போகலாம்..!

தற்போது ஆயுதபூஜை, தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 30- ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நான்கு நாட்களும் விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவைக் கூடுதல் விமான சேவை ஆகும்.

சிங்கப்பூரில் இறந்து கிடந்த செய்தித்தாள் போடும் ஊழியர் – போலீஸ் விசாரணை

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.