‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை குறித்த முழுமையான தகவல்!’

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக் குறித்து முழுமையாகப் பார்ப்போம்.

சட்டென்று மாறிய வானிலை… சிங்கப்பூர் முழுவதும் இலேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான வானிலை அறிக்கை!

அதன்படி, சென்னை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் திங்கள்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் மட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX687 என்ற விமானமும் இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை தொழில் நிறைந்த நகரம் என்பதால், சிங்கப்பூர் வழித்தடத்தில் அதிகளவில் பயணிகள், தொழிலதிபர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், இந்த வழித்தட விமான சேவைக்கான பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்கள்! – மானியம் வழங்கி ஆதரவு அளிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்..

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.