‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: IndiGO Official Twitter Page

 

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines), சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. அத்துடன், திருச்சி, டெல்லி, கொல்கத்தா, திருச்சி ஆகிய நகரங்கள் வழியாக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் இடையே தினசரி ஐந்து விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூபாய் 6.95 லட்சம் பண மோசடி!

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைக்கு ரூபாய் 9,261 கட்டணமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ரூபாய் 9,845 கட்டணமும் விமான நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

நண்பர் மீது லாரியை ஏற்றி, தரதரவென சாலையில் இழுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியர் – போதையில் நடந்த விபரீதம்

இந்த வழித்தட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக்கான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.