சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூபாய் 6.95 லட்சம் பண மோசடி!

 

 

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கவுதமன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் களைக்கட்டிய இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்!

அப்போது, வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையைச் சேர்ந்த அமரேந்திரன், அரியூரைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஆகியோர் தங்களை சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், “நாங்கள் இருவரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, சுமார் 18 பேரிடம் சுமார் 6.95 லட்சம் ரூபாயை வசூல் செய்து, வேலப்பாடியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தோம். அவர் எங்களை இதுவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லவில்லை; எங்கள் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார். அவரிடம் உள்ள எங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பர் மீது லாரியை ஏற்றி, தரதரவென சாலையில் இழுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியர் – போதையில் நடந்த விபரீதம்

மனுவைப் படித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பண மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.