சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்க விமான நிலைய ஆணையம் முடிவு!

Photo: Chennai Airport Official Twitter Page

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன நிரந்தர இணைப்பு பாலங்கள் எனப்படும் ஏரோ பிரிட்ஜ்களைக் கூடுதலாக அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி

விமான நிலையத்தில் உள்ள சில விமானங்களில் மட்டும் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஏரோ பிரிட்ஜ் வசதிகள் உள்ளன. மற்ற விமானங்களில் பயணிகள் ஏறி இறங்க லேடார் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நகரும் படிக்கட்டுகளால் மழைக்காலங்களில் பயணிகள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விமானங்களில் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்தளித்த தமிழக நிதியமைச்சர்!

தற்போது இருக்கும் ஏரோ பிரிட்ஜ்கள் அது இணைக்கப்பட்ட ஒரு விமானத்தில் தான் பயணிகள் ஏறி, இறங்க முடியும். ஆனால் புதிதாக அமைக்கப்படும் ஏரோ பிரிட்ஜ்கள் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் பயணிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.