இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்கள்…

(Photo: Indian Express)

சிங்கப்பூர்-இந்தியா ஆகிய இரு நாடுகளும் திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் சேவைகளை (scheduled commercial passenger services) மீண்டும் தொடங்குவது குறித்து தற்போது விவாதித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இதனை கோவிட்-19 அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அனுமதி: விமானங்களுக்கு திடீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஏஜென்சிகள் – இந்திய ஊழியரின் எதிர்பார்ப்பு

சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தலா இரண்டு தினசரி VTL விமானங்களை மீண்டும் இயக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

வரும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் அந்த பகுதிகளுக்கு அதனை செயல்படுத்த திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடன் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூர் பயண ஏற்பாடை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22, முதல் தொடங்கும்.

சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை, காற்று… வானிலை ஆய்வகம் கணிப்பு