சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை, காற்று… வானிலை ஆய்வகம் கணிப்பு

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் இந்த நவம்பர் மாதத்தின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நாட்களில் மதிய வேளைகளில், சில பகுதிகளில் குறுகிய கால மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.

கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்

மேலும், அதில் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை மாலை வரை நீடிக்கலாம் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதே போல, பரவலான இடியுடன் கூடிய மழையையும், அதிகாலை நேரத்திற்கும் காலைக்கும் இடையில் பலத்த காற்றையும் எதிர்பார்க்கலாம்.

இந்த மாதத்திற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு என்பது, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இடைப்பட்டு இருக்கும்.

மேக மூட்டம் குறைவாக இருக்கும் சில நாட்களில் இது சுமார் 34 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

தனிமை இல்லா பயண அனுமதி: இந்திய பயணிகள், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி