கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்

Success Engineering and Steel/FB

பூன் லேயில் உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கீழே விழுந்ததை தொடர்ந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் 22 சின் பீ ரோட்டில் (Chin Bee Road) நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

தனிமை இல்லா பயண அனுமதி: இந்திய பயணிகள், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

அவர் சக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் 35 வயதான இந்திய நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து பூம் லிப்ட் மேடையில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

அதன் பின்னர், அவர் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பணியிடத்தை ஆக்கிரமித்துள்ள லாஜிஸ்டிக்ஸ் கட்டுமான நிறுவனத்திற்கு அங்குள்ள அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் MOM தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை ஏற்பட்ட வேலையிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 33ஆகக் அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு முழுவதும் 30 வேலையிட இறப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி… அதற்கான விண்ணப்பங்கள் எப்போது துவங்கும்?