“சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஏர் இந்தியா’ விமானத்தில் செல்ல கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?”- விரிவான தகவல்!

Photo: Air India

 

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தினசரி ஒரு நேரடி விமான சேவைகளையும், டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் வழியாக ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 9,200 ரூபாயை ஏர் இந்தியா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது நேரடி விமான சேவைக்கான கட்டணமாகும். அதிகபட்சமாக, ரூபாய் 9,799, ரூபாய் 10,775, ரூபாய் 12,844 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஏர் இந்தியா' விமானத்தில் செல்ல கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?- விரிவான தகவல்!
Photo: Air India Website

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 11,448 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி பிரம்மோற்சவம்: சிங்கப்பூர்- திருப்பதி இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

தற்போது நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், சென்னை, சிங்கப்பூர் வழித்தட ஏர் இந்தியா விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.com// என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.