சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானத்தில் பயணிக்க கட்டணம் இவ்வளவு தானா?

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் ஸ்கூட் நிறுவனம் சமீபத்தில் விமான சேவையைத் தொடங்கியது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு பயணக் கட்டணமாக ரூபாய் 6,960-யை நிர்ணயித்துள்ளது விமான நிறுவனம். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு ரூபாய் 10,866 ஆக விமான பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் வெஸ்ட்டில் ஏற்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் மரணம்

இந்த சூழலில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், கட்டணம் குறைவாக இருப்பதாலும், சென்னை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Photo: Flyscoot

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை: 300 க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.