Zoo பார்வையாளர்கள் மீது பாறையை வீசிய “குட்டி சிம்பன்சி”, பிரம்பை எடுத்து வெளுத்து வாங்கிய “தந்தை சிம்பன்சி” – வைரல்

கையில் கருவிகளைப் எடுத்து அதை பயன்படுத்தத் தெரிந்த விலங்கு வகைகளில் சிம்பன்சி குரங்குகளும் ஒன்று.

சிங்கப்பூரில் இதை நிரூபிக்கும் வகையில் நகைச்சுவையான சம்பவம் ஒன்று சிம்பன்சி குரங்குகளுக்கு இடையே நடந்துள்ளது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

மனிதர்களைப் போலவே, கையில் பிரம்பை எடுத்து தங்கள் குட்டிகளை ஒழுங்குபடுத்திய சிம்பன்சி குரங்கு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த மார்ச் 13 அன்று 9 வினாடிகள் கொண்ட வீடியோவைப் Weibo மீம் பக்கம் பகிர்ந்துள்ளது, அதில் இளம் சிம்பன்சி மிருகக்காட்சிசாலையின் மலை விளிம்பில் நின்று பார்வையாளர்கள் மீது பாறையை வீச கைகளை சுழற்றுவதை காணலாம்.

பின்னர், இதை கண்ட ஒரு பெரிய சிம்பன்சி, இளம் சிம்பன்சியின் பெற்றோர் என்று கூறப்படும் அது, கையில் பிரம்பை வைத்து அதனை வெளுத்து வாங்குவதை வீடியோவில் காண முடிந்தது.

இதனை நெட்டிசன்கள் நகைச்சுவையாக கண்டு மகிழ்ந்து, ஷேர் செய்தும் வருகின்றனர்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி சந்தேக நபருக்கு அடி; அதிகாரி வெங்கடேஷ் சஸ்பென்ட்.!