சைனாடவுன் பாயின்ட் மாலின் 4வது மாடியில் இருந்து விழுந்த ஊழியர் மருத்துவனையில் அனுமதி (வீடியோ)

chinatown-point-fall man injured
Kurt Tay on YouTube

சைனாடவுன் பாயின்ட் மாலின் நான்காவது மாடியில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலின் திறந்தவெளி பகுதியின் இரண்டாவது தளத்தில் ஆடவர் தரையில் கிடப்பதைக் காட்டும் யூடியூப் வீடியோவை உள்ளூர் இணைய பிரபலம் Kurt Tay இன்று ஜனவரி 9 பதிவேற்றினார்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”

அவர், கூரையின் ஒரு பகுதி உடைந்ததால் கீழே விழுந்த ஊழியர் என்றும், சம்பவத்தின்போது ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆடவர் MCST ஆல் நியமிக்கப்பட்ட ஊழியர் என்றும் மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த பெரெனியல் (சிங்கப்பூர்) ரீடெய்ல் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் கூறியுள்ளது.

காயமடைந்த அந்த ஊழியர் சுயநினைவுடன் மாலை 3.34 மணியளவில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

12,000 நிறுவனங்கள் ஆய்வு: வேலையிடத்தில் விதிமீறல்…சுமார் S$141,000க்கும் அதிகமான அபராதம் விதித்துள்ள MOM