12,000 நிறுவனங்கள் ஆய்வு: வேலையிடத்தில் விதிமீறல்…சுமார் S$141,000க்கும் அதிகமான அபராதம் விதித்துள்ள MOM

Covid-19 workplace safety rules breach fined
AFP

வேலையிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக கடந்த ஆண்டு மட்டும் 140 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் மொத்த மதிப்பு சுமார் S$141,000க்கும் அதிகமான தொகை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதில் ஒரு நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!

கூடுதலாக, 12,000 நிறுவனங்களை ஆய்வு செய்ததாகவும் மனிதவள அமைச்சகம் கடந்த வாரம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொதுவான மீறல்கள், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய சாத்தியமுள்ள ஊழியர்களுக்கு அவ்வாறு செய்வதை உறுதி செய்யாதது மற்றும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை செயல்படுத்தாதது ஆகியவை அடங்கும்.

கடந்த ஆண்டு டிசம்பரில், 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 235 பேர் கலந்து கொண்ட திருமணத்தை நடத்தியதற்காக “ஆரஞ்சு பால்ரூம்” திருமண அரங்குக்கு S$8,000 மற்றும் திருமண ஏற்பாட்டாளருக்கு S$6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜனவரி 1 முதல், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 50 சதவீதம் பேர் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை