சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ‘MWC’!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள 'MWC'!

 

சீனப் புத்தாண்டு நாளை (பிப்.10) சிங்கப்பூரில் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள பொழுதுப்போக்கு இடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, சீனப் புத்தாண்டையொட்டி, பல்வேறு உணவகங்களும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் காணப்பட்ட அழிந்துவரும் அரியவகை “சிறுத்தைப் பூனை”

இந்த நிலையில், சீனப் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் 51 சூன் லீ சாலையில் (Soon Lee Road) உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Workers’ Centre – ‘MWC’) என்றழைக்கப்படும் ‘MWC’- ன் MWC Recreation Club- ல் வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொண்டாட்டங்களுக்கு ‘MWC’ ஏற்பாடுகளை செய்துள்ளது.

“இவ்வாண்டில் அதிகமான ஊழியர்கள் வேலையை இழக்கலாம்” – ஆதரவு வேண்டி வலுக்கும் கோரிக்கை

உள்ளூர் பாடகர்கள், சிங்கப்பூர் நடனங்கள், போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 2,150 வெள்ளி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘MWC’ உறுப்பினர்கள் ‘Sign Up’ செய்து வாட்டர் பாட்டிலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.