சிங்கப்பூரில் காணப்பட்ட அழிந்துவரும் அரியவகை “சிறுத்தைப் பூனை”

endangered leopard-cat-changi
曾少 / FB

சாங்கியில் அரியவகை பூனைகளில் ஒன்றான சிறுத்தைப் பூனையைப் பார்த்ததாக சிங்கப்பூரில் உள்ள ஆடவர் ஒருவர் கூறினார்.

அந்த பூனையின் புகைப்படத்தை நேற்று (பிப். 8) அவர் ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார்.

விபத்தில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டு சொந்த நாட்டுக்கு தப்பி ஓடியவர் கைது

அந்த பதிவின் தலைப்பில், இது எந்த வகையான பூனை என்பதை யாரவது அடையாளம் காண முடியுமா என்று அவர் கேட்டிருந்தார்.

இது சிறுத்தை பூனை என்றும் அதை எங்கே பார்த்தீர்கள் என்றும் பலர் அவருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியதாக கமெண்டில் அவர் குறிப்பிட்டார்.

சிறுத்தை பூனை வகை என்பது சிங்கப்பூரின் கடைசியாக எஞ்சியிருக்கும் காட்டுப்பூனை இனமாகும்.

மேலும் இது அழிந்துவரும் நிலையில் உள்ளதாகவும் சிங்கப்பூர் ரெட் டேட்டா புக் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 20 க்கும் குறைவான சிறுத்தை பூனைகள் மட்டுமே உள்ளதாக 2012 இல் Chua நடத்திய ஆய்வில்
கூறப்பட்டது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணி செய்த செயல்.. பயணிகளுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் சட்டத்தின்படி குற்றம்

Verified by MonsterInsights