விபத்தில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டு சொந்த நாட்டுக்கு தப்பி ஓடியவர் கைது

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

கடுமையான விபத்தை ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் தப்பி ஓடிய வெளிநாட்டவர் பிடிபட்டார்.

மலேசியாவைச் சேர்ந்த 27 வயதுமிக்க புவா யுய் லூன் என்ற அந்த ஆடவர், விபத்து நடந்த ஒரு நாளுக்கு பின்னர் சிங்கப்பூர் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணி செய்த செயல்.. பயணிகளுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் சட்டத்தின்படி குற்றம்

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட ஐந்து குற்றசாட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (பிப் 9) அவர் மீது சுமத்தப்பட்டன.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை 1.20 மணியளவில் உட்லண்ட்ஸ் நோக்கி செல்லும் புக்கிட் திமா விரைவுச்சாலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 22 வயதான ஜோசுவா சியாம் சீ வை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற 23 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கார் ஓட்டுநர் புவா, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய வாகனத்தை நிறுத்தவில்லை என்றும் உடனடியாக மலேசியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டார்.

உச்சத்தை தொடும் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு.. S$1 = RM3.505 வரை மாற்றி கொடுக்கும் எக்ஸ்சேஞ்ச் கடைகள்