உச்சத்தை தொடும் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு.. S$1 = RM3.505 வரை மாற்றி கொடுக்கும் எக்ஸ்சேஞ்ச் கடைகள்

Singapore-dollar-ringgit-money-changers-high

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் S$1இன் மதிப்பு RM3.5489 வரை அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இன்று (பிப். 8) அதன் மதிப்பு வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், ராஃபிள்ஸ் பிளேஸில் அமைந்துள்ள தி ஆர்கேட் ஷாப்பிங் மாலில் உள்ள பணம் மாற்று நிறுவனங்கள் S$1 க்கு RM3.505 வரை பணம் மாற்றி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்& PR-களுக்கு S$10,869 என அதிகரித்த சராசரி மாத குடும்ப வருமானம்

சைமன் டான் என்ற ஒருவர், S$1,000 சிங்கப்பூர் டாலரை RM3,505 என்ற மதிப்பில் பரிமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளார்.

அவர் மாற்றிய பணத்தின் சமீபத்திய ரசீதின் புகைப்படம் Facebook குழு ஒன்றில் பதிவேற்றப்பட்டது.

Source: Screenshot via PROFESSIONAL PHV DRIVERS SINGAPORE:Grab, Gojek,Tada n Ryde/Facebook

தாம் பணம் மாற்றிய கடையில் அதிக விகிதத்தில் மாற்று மதிப்பு இருந்ததாக கூறிய அவர், வேறு கடைகளில் அது RM3.50 அல்லது 3.502 வரையிலான மாற்று விகிதத்தைக் கொண்டிருந்ததாக கூறினார்.

Source: Screenshot via PROFESSIONAL PHV DRIVERS SINGAPORE:Grab, Gojek,Tada n Ryde/Facebook

வேறு எங்காவது இதை விட நல்ல மதிப்பில் பண மாற்றி தரப்படலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னர் பிப். 2 அன்று, மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் S$1இன் மதிப்பு RM3.5418 வரை அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.