சிங்கப்பூரர்& PR-களுக்கு S$10,869 என அதிகரித்த சராசரி மாத குடும்ப வருமானம்

சிங்கப்பூர்
Unsplash

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சராசரி மாத குடும்ப வருமானம் S$10,869 என அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் புள்ளியியல் துறை (Singstat) கூறியுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி உள்ள குடும்பங்களைக் குறிக்கும் இந்த சராசரி மாத குடும்ப வருமானம் பெயரளவு அடிப்படையில் 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

2022 இல் S$10,099 வெள்ளி என இருந்த சராசரி மாத குடும்ப வருமானம் கடந்த 2023 இல் S$10,869 என அதிகரித்துள்ளது.

பணவீக்கத்தை கொண்டு அதனை ஒப்பிட்டால், 2023ல் சராசரி மாத குடும்ப வருமானம் 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 2018 முதல் 2023 வரை, குடியுரிமை பெற்ற குடும்பங்களின் சராசரி மாத வருமானம், ஒட்டுமொத்தமாக 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.