வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

சிங்கப்பூரில் ஊழியர்கள் எவ்வளவு மணிநேரங்கள் வேலை
Photo: TODAY

சிங்கப்பூரில் பணிபுரியும் பல ஊழியர்களின் வேலை நிபந்தனையின்படி, அவர்கள் போட்டி நிறுவனத்தின் வேலைக்கு சேருவதை தடுக்க பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

இந்த நிபந்தனை கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வேறு வேலையில் சேருவது கடினமானதாக இருக்கும்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்

இந்நிலையில், இந்த வேலை நிபந்தனைகளை சரிசெய்யும் வழிகாட்டுதல்கள் ஒன்றை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாயன்று (பிப். 6) அறிவித்தார்.

ஆட்குறைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு அமைச்சர் டான் பதிலளித்தார். அண்மையில் லசாடா நிறுவனம் மேற்கொண்ட ஆட்குறைப்பு குறித்தும் அதில் கேள்விகள் இருந்தன.

ஆட்குறைப்பு செய்யப்படுவதால் பெரும்பாலும் ஊழியர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக கருத்து நிலவுகிறது.

கட்டுப்பாடு நிபந்தனைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அது பாதகத்தை ஏற்படுத்தும் என்றும், வேறு வேலையை தேடிக்கொள்வதில் சிக்கல்களை உருவாக்கும் என்றும் புரிந்துகொள்வதாக அமைச்சர் டான் குறிப்பிட்டார்.

முதலாளிகளுக்கு கற்றுக்கொடுக்கவும் மற்றும் நிபந்தனை விதிமுறைகளை வடிவமைக்கும் வழிகாட்டுதல்களை உருவாக்கவும் மனிதவள அமைச்சகமும் (MOM) மற்றும் அதன் முத்தரப்பு கூட்டாளிகளும் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“முதலாளியின் தேவையையும், ஊழியர்களின் வாழ்க்கையையும் அது சமநிலைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.”

வர்த்தகங்கள் நியாயமற்ற நன்மைகளைப் பெறுவதற்கு இந்த விதிகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் டாக்டர் டான் கூறினார்.

அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்