வரலாற்று உச்சத்தை தொட்ட மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு: S$1இன் மதிப்பு RM3.5418

singapore-dollar-ringgit-feb-2024-high
Google

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் S$1இன் மதிப்பு RM3.5418 வரை அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது.

நேற்று முன்தினம் வெள்ளியன்று (பிப்ரவரி 2) ரிங்கிட் மதிப்பு மேற்கண்ட உச்சத்தை தொட்டது.

ஊழியர்களுக்காக துணை நிற்கும் சிங்கப்பூர் அரசாங்கம்.. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையாகும் விதிகள் – 2024 ஏப். 1 முதல் கட்டாயம்

முந்தைய சாதனையாக கடந்த ஜனவரி 23 அன்று S$1இன் மதிப்பு RM3.5343 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் டாலரின் மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 9.16 சதவிகிதம் உயர்வை கண்டுள்ளது.

அதாவது புரியும்படி சொல்லப்போனால், ரிங்கிட் வைத்திருந்தவர்கள் அதை ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் டாலராக மாற்றி, தற்போது வரை வைத்திருந்தால் அதற்கான மதிப்பு சிறந்ததாக இருக்கும்.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்