ஊழியர்களுக்காக துணை நிற்கும் சிங்கப்பூர் அரசாங்கம்.. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையாகும் விதிகள் – 2024 ஏப். 1 முதல் கட்டாயம்

more-public-sector-construction-projects-come-under-stricter
Photo: AFP/Roslan Rahman

தவறான முன் அனுபவங்களை கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தகுதி நீக்கம் செய்யும் வேலையிடப் பாதுகாப்புக் கட்டமைப்பின் (workplace safety framework) கீழ் இனி பல பொதுத்துறை கட்டுமானத் திட்டங்கள் வரவுள்ளன.

2024 ஏப். 1 முதல், மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும்.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளின் இது ஒரு பகுதியாக வரவுள்ளது.

மேலும், இதன்கீழ் வரும் கட்டுமான திட்டங்களில் கூடுதலாக துணை ஒப்பந்ததாரர்களுக்கும் ஈடுபடுத்தப்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு மொத்தமுள்ள கட்டுமான தேவைகளில் சுமார் 50 சதவீதத்துக்கு மேல் பொதுத் துறையின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வேலையிடங்களை கூடுதலாக பாதுகாத்து, ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டத்தை பொதுத் துறை திட்டங்களிலும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது.

அதே போல, தனியார் துறைகளும் சிறந்த மேம்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு