சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணி செய்த செயல்.. பயணிகளுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் சட்டத்தின்படி குற்றம்

Changi airport police arrest misusing boarding pass
SPF/FB & Changi Airport website

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் பகுதிக்குள் நுழைய போர்டிங் பாஸ் அனுமதியை தவறாகப் பயன்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

25 வயதான அவர் போர்டிங் பாஸைப் பெறுவதற்காக மட்டுமே விமான டிக்கெட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

உச்சத்தை தொடும் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு.. S$1 = RM3.505 வரை மாற்றி கொடுக்கும் எக்ஸ்சேஞ்ச் கடைகள்

இருப்பினும், அந்த பெண்ணுக்கு சிங்கப்பூரை விட்டு வெளியேறும் எண்ணம் ஏதும் இல்லை என போலீசார் நேற்று (பிப்ரவரி 8) தெரிவித்தனர்.

பிரபல தென்கொரிய K-pop இசைக் குழுவின் Enhypen என்ற கலைஞரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் அவ்வாறு செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த மாதம் நடந்த இசை நிகழ்ச்சிக்கு அந்த குழு வருகை தந்திருந்தது.

உயர்பாதுகாப்பின்கீழ் உள்ள விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்களை தவறாக பயன்படுத்துவது உள்கட்டமைப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்

சிங்கப்பூரர்& PR-களுக்கு S$10,869 என அதிகரித்த சராசரி மாத குடும்ப வருமானம்