சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

தங்க நகைகளை சட்டவிரோத முறையில் இந்திய நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளை கண்காணிக்கும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

அவ்வாறான பயணிகள் குறிப்பிட்ட கட்டணம் பெற்றுகொண்டு சட்டவிரோத முறையில் நகைகளை எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டு சொந்த நாடு திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் புதிய மாதிரி விடுதி அறை.. சோதனைக்காக தங்கிய ஊழியர்கள் – அங்கிருக்கும் வேற லெவல் சிறப்புகள் என்ன?

இந்திய நாட்டிற்குள் தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வளைகுடா நாடுகளின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் பயணிகளை சட்டவிரோத கும்பல் குறிவைப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அதில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். ஏனெனில், இந்தியாவை விட மேற்குறிப்பிட்ட நாடுகளில் தங்கம் மலிவாக கிடைக்கும்.

சமீபத்தில், 13 கிலோ தங்கம், 200க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள், சிகரெட்டுகள் ஆகியவற்றை இந்திய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதற்கான கமிஷனாக சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்களை கொடுத்து பயணிகளை அவர்கள் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

அதேபோல, சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனையம் 1 இல் இந்திய ஊழியர்களை கடத்தல்காரர்கள் அணுகி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.

நாங்க கொண்டுபோறோம் என விருப்பம் காட்டும் பயணிகள், விமான நிலையத்தில் உள்ள அமைதியான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு வைத்து இதற்கான ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, ​இந்தியா சென்றவுடன் அங்கு ஒரு கடத்தல்காரர் இருப்பார் என்றும், அவர் உங்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொள்வார் என்றும் உறுதியளிக்கப்படுகிறது.

இந்தியா வந்தவுடன் சட்டவிரோத கடத்தல் பொருட்களை வாங்கிக்கொண்டதும் அவர்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

நான்கு லாரி, 2 டிரக் மோதி கடும் விபத்து: சம்பவ இடத்திலேயே 28 வயதுமிக்க ஆடவர் மரணம் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி