வெளிநாட்டு ஊழியர்களின் புதிய மாதிரி விடுதி அறை.. சோதனைக்காக தங்கிய ஊழியர்கள் – அங்கிருக்கும் வேற லெவல் சிறப்புகள் என்ன?

migrant worker dormitory rooms new look
Photo: DASL

சிங்கப்பூரில் தொற்றுநோய் கடுமையாக இருந்தபோது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமி பரவல் ஹாட்ஸ்பாட் இடங்களாக மாறியது. அதன் பிறகு, புதிய தங்கும் விடுதிகளுக்கான உயர் தரநிலைகள் குறித்து அரசாங்கம் அறிவித்தது.

தற்போதுள்ள தங்கும் விடுதிகள் 2030 ஆம் ஆண்டுக்குள் இடைக்கால தரநிலைகளையும், மேலும் 2040 க்குள் புதிய தங்குமிடங்களுக்கு ஒப்பான அதே தரநிலையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என மனிதவள அமைச்சகம் (MOM) திட்டமிட்டுள்ளது.

நான்கு லாரி, 2 டிரக் மோதி கடும் விபத்து: சம்பவ இடத்திலேயே 28 வயதுமிக்க ஆடவர் மரணம் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

விடுதி அறைகளை எவ்வாறு மாற்றி அமைப்பது என்பது குறித்து சிங்கப்பூர் லிமிடெட் டார்மிட்டரி அசோசியேஷன் (DASL) நடத்தும் ப்ராஜெக்ட் கம்யூன் (Project Commune) பரிசீலனை செய்து வருகிறது.

இந்நிலையில், அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட மாதிரி அறைகள் உருவாக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் 8 வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் திரு சுப்பையா அர்ஜுன்ராஜா என்ற 30 வயது ஊழியர். சிங்கப்பூரில் உள்ள மற்ற விடுதி போலல்லாமல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கும் விடுதி அறையில் அவர் தங்கியிருந்தார்.

அந்த அறையில், ஓய்வெடுக்க, ஆடை அணிவதற்காக மற்றும் சமைப்பதற்கு என வெவ்வேறு இடங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு இருந்தன.

தனிமைக்காக வேண்டி படுக்கைகளுக்கு இடையே பெக்போர்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Photo: DASL

அந்த புதிய அறைகளில் கார்டு வடிவ சாவியைப் பயன்படுத்தி திறக்கும் அலமாரிகளும் இருந்தன. அதில் மோஷன் சென்சார் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. கதவு திறந்தவுடன் தானாகவே விளக்கு எரியும்.

Photo: DASL

ஆனால், தற்போதைய தங்கும் விடுதிகளில் பொதுவாக படுக்கைகளுக்கு அடியில் இழுக்கும் லாக்கர்கள் மட்டுமே இருக்கும்.

அறையில் படிப்பதற்காக தனி இடம் மற்றும் சாப்பாட்டு மேஜை போன்ற சில வசதிகளும் இருந்ததாக திரு அர்ஜுன்ராஜா கூறினார்.

Photo: DASL

திரு அர்ஜுன்ராஜா குறிப்பிட்ட படிப்பதற்காக தனி இடம், சத்தம் வெளிச்செல்லா வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

அங்கு ஊழியர்கள் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனியாக அமர்ந்து நன்றாக பேசி அரட்டை அடிக்கும் வகையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போதுள்ள பழைய அறைகளில் தொலைபேசி அழைப்பு வந்தால் வெளிச்சென்று பேசும் நிலை உள்ளது.

மேலும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அறையில் இருந்தன. இது நம் சொந்த வீட்டில் இருந்தது போன்ற நினைவுகளை கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.

Photo: DASL and Agency

சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்