“இவ்வாண்டில் அதிகமான ஊழியர்கள் வேலையை இழக்கலாம்” – ஆதரவு வேண்டி வலுக்கும் கோரிக்கை

singapore retrenched-workers support
Photo: Changi Airport Official Facebook Page

சிங்கப்பூர் ஊழியர் இயக்கத்தால் நடத்தப்பட்ட இரண்டு சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் இங்குள்ள ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுவதாகக் கூறப்படுகின்றது.

அது ஒருபுறம் இருக்க, ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவுப் திட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது எழுந்துள்ளன.

விபத்தில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டு சொந்த நாட்டுக்கு தப்பி ஓடியவர் கைது

அதாவது, ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இடைக்கால ஆதரவு வேண்டும் என தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஆகியவை கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி வரை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நடத்திய முதல் கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 2,000 ஊழியர்கள் கருத்து கூறினர்.

அதில் 40 சதவீதம் பேர் அடுத்த மூன்று மாதங்களில் தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று கருதினர்.

சிங்கப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை (2022) விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

2022இல் 6,440 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் அது 14,300 ஆக எகிறியது.

இந்த 2024 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கும் என NTUC பொதுச்செயலாளர் Ng Chee Meng குறிப்பிட்டார்.

ஏனெனில், இந்த ஆண்டு அதிகமான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாக NTUC மற்றும் SNEF ஆகியவை தெரிவித்தன.

வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணி செய்த செயல்.. பயணிகளுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் சட்டத்தின்படி குற்றம்

Verified by MonsterInsights