‘சீனப் புத்தாண்டையொட்டி, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது NTUC FairPrice!’

Photo: NTUC FairPrice

 

சீனப் புத்தாண்டையொட்டி, வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை ‘NTUC FairPrice’ வெளியிட்டுள்ளது.

பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

‘NTUC FairPrice’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 18- ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனப் புத்தாண்டை (Chinese NewYear) முன்னிட்டும், சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையிலும், அதிகளவில் விற்பனையாகும் பிரபல கடல் உணவுகளும், காய்கறிகளும் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படும்.

'சீனப் புத்தாண்டையொட்டி, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது NTUC FairPrice!'
Photo: NTUC FairPrice / Facebook Page

இந்த சலுகை ஜனவரி 18- ஆம் தேதி முதல் பிப்ரவரி 14- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். சிங்கப்பூரில் உள்ள அனைத்து ‘NTUC FairPrice’ பேரங்காடிகளில் இந்த சலுகை அமலில் இருக்கும். எந்தெந்த பொருட்களுக்கு விலை மாற்றமில்லை என்ற பட்டியலை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ‘NTUC FairPrice’ பேரங்காடிகளுக்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன்!

அதிகரித்து வரும் செலவினங்களை சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவும் வகையில், இந்த நடவடிக்கையை ‘NTUC FairPrice’ மேற்கொண்டுள்ளது.