சீனப் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட மக்கள்….சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சீனப் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட மக்கள்....சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
Jalanow and facebook image

 

சீனப் புத்தாண்டையொட்டி, பிப்ரவரி 10- ஆம் தேதி விடுமுறை என்பதாலும், மறுநாள் (பிப்.11) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், குடும்பத்துடன் மலேசியாவுக்கு ஒரே நேரத்தில் தங்களது கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்லத் தொடங்கினர்.

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

இதன் காரணமாக, சிங்கப்பூர்- மலேசியா நாடுகளின் எல்லை பகுதியான உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் (Woodlands Checkpoint) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பேருந்துகள் மூலம் மலேசியாவுக்கு செல்ல ஏராளமானோர் ஒரே நேரத்தில் படையெடுத்ததால், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதேபோல், பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.13 மணி நிலவரப்படி, உட்லண்ட்ஸில் இருந்து ஜோகூர் பாருவுக்கு வாகனங்கள் மூலம் செல்ல 58 நிமிடங்கள் தேவைப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் சாலையில் வாகனங்கள் நீண்டத் தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.

சீனப் புத்தாண்டு வேளையில் சண்டை.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சீனப் புத்தாண்டு தினத்தன்று சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நேரில் ஏற்படக்கூடும் என்பதை சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority) கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by MonsterInsights