சீனப் புத்தாண்டையொட்டி, எஸ்பிஎஸ் டிரான்ஸிட் ஊழியர்களுக்கு McDonald’s இலவசமாக உணவு வழங்கியது!

Photo: McDonald's Singapore

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டை பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். குறிப்பாக, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு புலி ஆண்டு என்பதால், சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் புலி உருவங்களுடன் கூடிய கண்ணைக் கவரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தனர். இதனால் சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டு வாழ்க்கை…பிரிய மனமில்லாமல் அழுத மனைவி; இணையத்தில் வைரல்!

இந்த நிலையில், எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit) நிறுவனத்தின் முன்னிலை ஊழியர்கள் சீனப் புத்தாண்டு நாளில் பொது போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர். பண்டிகை காலத்திலும் பொது போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு வழங்கிய எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் முன்னிலை ஊழியர்களைப் பாராட்டும் விதமாக 6,500 பேருக்கு புத்தாண்டு சிறப்பு உணவாக ‘Prosperity Meals’- யை வழங்கியது சிங்கப்பூரில் உள்ள McDonald’s நிறுவனம்.

அதன்படி, 17 பேருந்து சந்திப்புகளில் (17 Bus Interchanges) உள்ள பேருந்து கேப்டன்கள் (Bus Captains), பேருந்து முனையத்தின் ஊழியர்கள் (Interchange staff), போக்குவரத்து ஆய்வாளர்கள் (Traffic Inspectors), போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் (Transit Security Officers) மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (Cleaners) உணவுகள் வழங்கப்பட்டது.

திருமண நாளன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மனைவி; சுமார் $650,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு.!

கொரோனா பரவல் காரணமாக, ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு இலவச உணவுக்கான வவுச்சர்களை (Vouchers) McDonald’s வழங்கியது. அதைத் தொடர்ந்து, நேரில் ஊழியர்கள் நேரில் சென்று உணவுகளைப் பெற்றுக் கொண்டனர். ஊழியர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான மிக உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி உணவு விநியோகம் செய்யப்பட்டதாக McDonald’s நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.