சுவா சூ காங்கில் கலவரத்தில் ஈடுபட்டதாக 13 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!

Choa Chu Kang riot
Choa Chu Kang riot: 13 men to be charged after weapons including knife, knuckle dusters used in fight

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை சுவா சூ காங்கில் (Choa Chu Kang) நடந்த சண்டையின் போது கத்தி, இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்டதை அடுத்து 13 ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அந்த ஆடவர்கள் 17 to 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சனிக்கிழமை அதிகாலை செய்தி வெளியீட்டில் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 4 புதிய COVID-19 சம்பவங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டியது..!

வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில், 10 சுவா சூ காங் வேயில் கலவரம் தொடர்பாக போலீசார் எச்சரிக்கப்பட்டனர்.

கைது

அதன் பின்னர் ஜலான் புக்கிட் மேரா, வெஸ்ட் கோஸ்ட் ரோடு, யிஷூன், புக்கிட் படோக் மற்றும் லோயர் கென்ட் ரிட்ஜ் சாலை ஆகிய இடங்களில் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

“குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜுராங் போலீஸ் பிரிவு அதிகாரிகள் 13 பேரின் அடையாளங்களை கண்டு, 28 மணி நேரத்திற்குள் அவர்களை கைது செய்தனர்.”

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை போலீஸ் ஒருபோதும் பொருத்துக்கொள்ளாது, மேலும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தண்டனை

அந்த ஆடவர்களின் 5 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் என CNA குறிப்பிட்டுள்ளது, இதற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

மீதமுள்ள எட்டு ஆண்கள் மீது கொடிய ஆயுதம் ஏந்திய சட்டவிரோத கூட்டம் கூடியதாக குற்றம் சாட்டப்படும் என CNA குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம், பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகளின் ஏதேனும் சேர்த்தும் வவிதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது உயிரிழந்த இந்திய வம்சாவளி ஆணழகன் பிரதீப் குறித்த அறிக்கை..!