நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய இரு சந்தைகள் மீண்டும் செயல்பட அனுமதி.!

Chongpang Whampoa markets Reopen
Pics: Google Street view

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம், ஹொங் லிம் சந்தை, உணவு நிலைய நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய சொங் பாங், வாம்போ டிரைவ் (Chong Pang, Whampoa Drive) சந்தைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

சொங் பாங் சந்தை கடந்த மாதம் 21ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த மாதம் 22ம் தேதி மூடப்பட்ட வாம்போ டிரைவ் சந்தை நாளை (ஆகஸ்ட் 06) மீண்டும் திறக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் புன்னகைக்கு காரணமான புகைப்படம் – (காணொளி)

சொங் பாங், வாம்போ டிரைவ் ஆகிய இரு சந்தைகளில் சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுக நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய குழுமங்களின் பட்டியலில் இருந்து அந்த இரு சந்தைகளும் நீக்கப்பட்டது என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் நடவடிக்கை: 12 பேர் கைது – S$152,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்